விக்ரம் வெளியீட்டுக்கு முன் ரஜினி - கமல் சந்திப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் சந்தித்துக் கொண்டனர்.


லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் சந்தித்துக் கொண்டனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர், அனிருத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு வகையில் படத்தினை விளம்பரம் செய்து வருகிறது படக் குழு. பஞ்ச தந்திரம் நண்பர்கள் மூலம் உருவாக்கப்பட்ட ப்ரோமோவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சந்தித்துக்கொண்டனர். சந்திப்பானது போயஸ் கார்டனிலுள்ள ரஜினியின் இல்லத்தில் நடைபெற்றது. சந்திப்பின்போது விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜும் உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...