92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

யோகி பாபு, சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’ டிரைலர் வெளியீடு

சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த  ‘ஓ மை கோஸ்ட்’   தமிழ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:21 am

DIN

சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த  ‘ஓ மை கோஸ்ட்’   தமிழ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன் 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். 

தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். 

இந்நிலையில், அவர் நடிப்பில் உருவான புதிய தமிழ் படமான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஏயு தயாரித்துள்ள இந்தப் படத்தினை ஆர். யுவன் இயக்கியுள்ளார். இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.