புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அசாம் முதல்வரை கங்கனா ரணாவத் சந்திக்க காரணம் என்ன?

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது அடுத்த படமான எமர்ஜென்சி படத்தின் படப்பிடிப்பை விரைவில் அசாமில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2022, 11:20 am

DIN

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது அடுத்த படமான எமர்ஜென்சி படத்தின் படப்பிடிப்பை விரைவில் அசாமில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது அடுத்தப் படமான எமர்ஜென்சி திரைப்படத்தை எழுதி இயக்குகிறார்.இந்தப் படத்தில் கங்கனா ரணாவத் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது அந்தப் படத்திற்காக படப்பிடிப்பு நடத்துவதற்கு சில நாட்களாக இடம் தேடி வருகிறார் ரணாவத். அதன் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தில் கங்கனா ரணாவத் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

இது குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது: கடந்த ஒரு வாரமாக அசாமின் காசிரங்கா மற்றும் கர்பி-அங்லாங் பகுதிகளில் படப்பிடிப்புக்காக சரியான இடம் தேடி வருகிறோம். நான் அசாமிற்கு பலமுறை வந்துள்ளேன். படப்பிடிப்பு நடத்துவதற்கு அசாமில் பல அழகான இடங்கள் உள்ளன. நான் மீண்டும் என்னுடைய முழுப் படக்குழுவினருடன் அசாமிற்கு வருவேன் என்றார்.

தனது இந்தப் பயணத்தின்போது மரியாதை நிமித்தமாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை கங்கனா ரணாவத் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.