டிவிட்டர் ‘ப்ளூ டிக்’: எலான் மாஸ்க்குக்கு கங்கனா சொன்ன யோசனை!

ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும் டிவிட்டர் ‘ப்ளூ டிக்’ கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத்

ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும் டிவிட்டர் ‘ப்ளூ டிக்’ கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரை எலான் மாஸ்க் வாங்கியது முதல் ப்ளூ டிக் கட்டண உயர்வு, ஆட்கள் குறைப்பு, வருவாய் இரட்டிப்பு திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா, ஆதார் அட்டை இருக்கும் அனைவருக்கும் ‘ப்ளூ டிக்’ கொடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,

தற்போதைய சூழலில் டிவிட்டர்தான் சிறந்த சமூக ஊடகமாக இருக்கின்றது. ப்ளூ டிக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ப்ளூ டிக் இல்லாத நபர்கள் முறையான ஆவணங்கள் இயலாத நபர்களா? உதாரணமாக, நான் ப்ளூ டிக் பெற்ற நபராக இருக்கிறேன். ஆனால், எனது அப்பா ப்ளூ டிக் வேண்டுமென்று நினைக்கிறார். ஆனால், 3-4 முறை நிராகரிக்கப்பட்டது. அப்படியென்றால் அவர் முறையாக வாழவில்லையா? ஆதார் அட்டை உள்ள அனைவரும் சரிபார்க்கப்பட்டு ப்ளூ டிக் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கங்கனாவின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com