
சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் அடுத்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா நடிப்பில் உருவாகின படம் - பிரின்ஸ். இயக்கம் - கே.வி. அனுதீப். இசை - தமன். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு. டான் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த இந்தப் படம், அக்டோபர் 21 அன்று வெளியானது.
இந்நிலையில் பிரின்ஸ் படம் ஓடிடியில் வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரின்ஸ் படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் நவம்பர் 25 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.