தமன்னாவுக்கு விரைவில் டும்டும்டும்!
பிரபல நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.


பிரபல நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து, தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
எல்லா நடிகைகளை போலவே, இவரையும் அடிக்கடி திருமண கிசுகிசுவில் ரசிகர்கள் சிக்க வைப்பது வழக்கம். அப்படி போலியான செய்திகள் பரவும் போதெல்லாம் அதை மறுத்து தமன்னா கருத்து தெரிவித்து வந்தார்.
தற்போது மீண்டும் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்தமுறை தமன்னா தரப்பிலிருந்து எந்தவித எதிர்ப்பும் வெளியாகவில்லை.
திருமண விஷயங்களை தனது பெற்றோரிடம் விட்டுவிட்டதாகவும், அவர்களும் தமன்னாவுக்கு ஏற்ற மும்பை தொழிலதிபர் ஒருவரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது மும்பை தொழிலதிபருக்கு தமன்னா கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...