தென்னிந்தியாவில் 5 முறை ஃபிலிம்பேர் விருது பெற்ற நடிகை!

தமிழ்த் திரைத்துறையில் தனக்கென தனிமுத்திரையைப் பதித்தவர் நயன்தாரா. இவர்  50-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவரது ரசிகர்களால் சூட்டப்பெற்றவர்.
தென்னிந்தியாவில் 5 முறை ஃபிலிம்பேர் விருது பெற்ற நடிகை!
Published on
Updated on
3 min read

தமிழ்த் திரைத்துறையில் தனக்கென தனிமுத்திரையைப் பதித்தவர் நயன்தாரா. இவர்  50-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவரது ரசிகர்களால் சூட்டப்பெற்றவர்

2003-ம் ஆண்டு மலையாள படத்தில் அறிமுகமான நயன்தாரா, இப்படத்தைத் தொடர்ந்து 2005-ல் தமிழ்த் திரையுலகில் ஹரி இயக்கத்தில் உருவான சரத்குமாரின் ஐயா திரைப்படத்தில் அறிமுக நாயகியாக நடித்தார். அப்படத்தில், சிறந்த அறிமுக நடிகை என பலராலும் கௌரவிக்கப்பட்டு, பாராட்டப்பட்டார். தொடர்ந்து அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தன்னுடைய நடிப்பால் பலரின் மனதைக் கொள்ளையடித்தவர் நயன்தாரா. 

தமிழ் சினிமாவில் "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டப் பெயரோடு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் மிகவும் முக்கியமானவராக தற்போதும் நயன்தாரா வலம்வந்து கொண்டிருக்கிறார். 

தென்னிந்தியாவில் ஐந்து முறை ஃபிலிம்பேர் விருது பெற்ற தமிழ்த் திரையுலகில் அதிகபட்ச விருதுகளைப் பெற்ற சில நடிகைகளில் இவரும் ஒருவர். மேலும் தமிழக அரசு கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கி வரும் கலைமாமணி விருதையும் ஆந்திரம் மற்றும் தெலங்கானா அரசுகளின் நந்தி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஒரு நடிகருக்கு வழங்கப்படும் மிகப்பெரிய கௌரவ விருதாக இம்மூன்றும் கருதப்படுகிறது. இவை தவிர பல விருதுகளையும் நயன்தாரா பெற்றுள்ளார். 

திரையுலகில் நயன்தாரா குவித்த விருதுகள்

2015-ல் வெளியான மாயா படத்தில் நடித்ததற்காக  சிறந்த நடிகைக்கான விருதை சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி நயன்தாரவுக்கு வழங்கியது. 

கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களை பாராட்டி தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதை 2010-ல் சிறந்த பங்களிப்புக்காக நயன்தாராவிற்கு வழங்கப்பட்டது. 

2015-ல் வெளியான நானும் ரௌடி தான், 2017-ல் வெளியான அறம் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நயன்தாராவுக்கு ஆனந்த விகடன் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் சார்பில் 2013-ல் வெளிவந்த ராஜா-ராணி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கொடுக்கப்பட்டது.

2007-ல் வெளிவந்த ஈ படத்தில் சிறந்த நடிகைக்கான விருதை மாத்ருபூமி திரைப்பட விருதுகள் சார்பில் நயன்தாரா பெற்றார்.

ராஜா-ராணி, நானும் ரௌடி தான், அறம், இமைக்கா நொடிகள் ஆகிய படத்தில் நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான எடிசன் விருது வழங்கப்பட்டது. 

2011 வெளிவந்த ராம ராஜ்ஜியம், 2013, 2015-ல் வெளியான ராஜா-ராணி, நானும் ரவுடி தான், 2016-ல் புதிய நியமம் என்ற மலையாள படத்திற்கும்,  2017-ல் அறம் ஆகிய படத்தில் நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2017-ல் வெளியான புதிய நியமம் என்ற மலையாள படத்திற்கு கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கம் சிறந்த நடிகைக்கான விருது அவருக்கு வழங்கியது.

2011-ல் ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆந்திர அரசின் நந்தி விருதைப் பெற்றார் நயன்தாரா.

பாரத்முனி திரைப்பட விருதுகள் சார்பில் ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதும், அதேப் படத்துக்காக உகாதி புரஸ்கார் வழங்கும் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றார்.

2003ல் வெளியான மனசினக்கரே படத்திற்கும், 2010ல் வெளியான பாடிகார்ட் படத்துக்கும் ஆசியாநெட் திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

ராம ராஜ்ஜியம், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ஆகிய படத்திற்கும், நானும் ரௌடிதான், பாஸ்கர் என்கிற ராஸ்கல், இருமுகன், புதிய நியமம், அறம், கோலமாவு கோகிலா ஆகிய படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளும் நயன்தாராவுக்கு வழங்கப்பட்டன.

பில்லா, யாரடி நீ மோகினி, ராஜ ராணி, அறம் ஆகிய படத்தில் சிறந்த நடிகைக்கான விஜய் விருதைப் பெற்றார் நயன்தாரா.

பில்லா படத்திற்கு அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதை சன்ஃபீஸ்ட் தமிழ் இசை விருதுகள் சார்பில் வழங்கப்பட்டது. 

ராஜா ராணி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிஹைண்ட்வூட்ஸ் விருதும் நயன்தாராவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2020-ல் வெளியான விஸ்வாசம், பிகில் ஆகிய படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதும் ஜி-சினிமா சார்பில் வழங்கப்பட்டது.

நடிக்கும் காலம் முழுவதும் இன்னமும் விருது வாங்கிக் கொண்டேதான் இருப்பார்போல நயன்தாரா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com