
கடந்த 2000-வது ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, பாலிவுட்டில் கால் பதித்த அவர் ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார். 2018-இல் தன்னைவிட 10 வயது இளையவரான அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
சமீபத்தில் 2021இல் கீனு ராவஸ் உடன் இணைந்து நடித்த தி மேட்ரிக்ஸ் ரெஷர்க்கஸன் வெளியானது. அடுத்து ‘லவ் அகைன்’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் பிரியங்கா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தொகுப்பாளர் ஜானிஸ் செக்வேரா என்பவரிடம் கூறியதாவது:
நடிகர் நடிகைகள் எதுவுமே செய்யாமல் வெற்றியின் புகழை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொள்கிறார்கள். யாரோ ஒருவர் எழுதிய திரைக்கதையில் நடிக்கிறோம். மற்றவர் எழுதிய வார்த்தைகளை உச்சரிக்கிறோம். யாரோ ஒடுவர் பாடும் பாடலுக்கு உதட்டை அசைக்கிறோம். நாங்கள் ஆடும் நடனம்கூட மற்றவர் ஆடிக்காட்டுவதுதான். நாங்கள் விளம்பரம் மட்டுமே படுத்துகிறோம். எங்களுக்கு ஆடை அலங்காரம் செய்பவர்கள்கூட மற்றவர்கள்தான். அதனால் இதில் நாங்கள் என்ன செய்கிறோம்? ஒன்றுமே செய்யாமல் எல்லா புகழினையும் எடுத்துக் கொள்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.