ஆமிர் கான் மகளுக்கு நிச்சயதார்த்தம்!

ஆமிர் கான் மகளுக்கு நிச்சயதார்த்தம்!

ஆமிர் கானின் மகள் ஐரா கானுக்கும் அவரது நீண்டநாள் காதலர் நுபூர் சிகாருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 
Published on

1986-ல் நடிகை ரீனா தத்தாவைத் திருமணம் செய்தார் ஆமிர் கான். இவர்களுக்கு ஜுனைத் என்கிற மகனும் ஐரா என்கிற மகளும் உள்ளார்கள். 2002-ல் விவாகரத்து பெற்று ஆமீர் கானும் ரீனா தத்தாவும் பிரிந்தார்கள். லகான் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவை 2005-ல் திருமணம் செய்தார் ஆமிர் கான். 2011-ல் ஆசாத் ராவ் கான் என்கிற மகன் பிறந்தார். 15 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிவதாக ஆமிர் கானும் கிரண் ராவும் கடந்த வருடம் அறிவித்தார்கள்.

ஃபிட்னஸ் பயிற்சியாளர் நுபூர் சிகாரைக் காதலித்து வந்தார் ஐரா கான். தனது காதலரைத் திருமணம் செய்வதற்கு சம்மதம் அளித்து விடியோவை இன்ஸ்டகிராமில் அவர் பகிர்ந்திருந்தது வைரலானது. 

இந்நிலையில் நேற்று அவர்களுக்கு குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கலந்துக் கொண்டார் ஆமிர்கான். 

அவரது நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. சமீபத்தில்அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதால் இனி ஓரிரு ஆண்டுகளுக்கு நடிக்க போவதில்லை என கூறியிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com