கனவு நனவானது: ‘கலகத் தலைவன்’ படத்தில் நடித்த ஆரவ் நெகிழ்ச்சி!
பிக்பாஸ்1 மூலம் பிரபலமானவர் ஆரவ். அவரது முதல் படம் மார்கெட் ராஜா எம்பிபிஎஸ் சரண் இயக்கத்தில் வெளியானது.
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் கலகத் தலைவன். இந்தத் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி படத்துக்கு இசையமைக்கின்றனர்.
தற்போது ஆரவ் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியதாவது:
கனவு நனவானது! சினிமா திரையரங்குகளில் உள்ள அனைவராலும் எனது கதாபாத்திரத்திற்கு ஒருநாள் பாராட்டும் கைத்தட்டும் கிடைக்குமென நினைத்திருக்கிறேன். எனது சினிமா பயணம் கனவில் தொடங்கி அதிகமான தோல்விகளில் முடிந்துள்ளது. நம்பிக்கையும் விடாமுயற்சியும் மட்டுமே என்னை முன்னோகி நகர்த்தியது. தொலைக்காட்சி, பத்திரிக்கை, இணையதளம், நண்பர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் வரும் சின்ன சின்ன பாராட்டுகளும் என்னை இன்னும் உற்சாகபடுத்துகிறது. கலகத் தலைவன் படத்தில் ‘அர்ஜூன்’ கதாபாத்திரம் எனக்கு அதிகப்படியான வரவேற்பினை கொடுத்துள்ளது.
இந்த வாய்பினை தந்த உதயநிதி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முக்கிய கதாபாத்திரத்துடன் இவ்வளவு ஸ்கிரீன் பேஸ் கொடுப்பது அரிதானது. அவரது இந்த பெருந்தன்மைக்கு நன்றி. என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தில் தேர்வு செய்த இயக்குநர் மகிழ் திருமேனி அவர்களுக்கும் படக்குழுவிற்கும் மிக்க நன்றி. இணையதள பத்திரிக்கை நண்பர்கள் எப்போதும் எனது உழைப்பிற்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார்கள். இனிமேலும் உங்களை மகிழ்விக்க தொடர்ந்து முயல்வேன். எப்போதும் நன்றியுடன் ஆரவ்.
Related Article
’விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன்’: எஸ்.ஜே.சூர்யா
இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் புகைப்படங்கள்!
ஜீ தமிழ் 'கனா'! மற்ற சீரியல்களிலிருந்து மாறுபட்டது: 10 காரணங்கள்!!
காதலிக்கு ரூ.100 கோடியில் வீடு... நடிகர் ஹிருத்திக் ரோஷன் விளக்கம்
வெங்கட் பிரபு - நாக சைதன்யா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.