அந்த விஷயத்தில் அனுஷ்கா - கோலியை ஃபாலோ செய்யும் ஆலியா - ரன்பீர்?

ஆலியா பட் - ரன்பீர் கபூர் இணையருக்கு நவம்பர் 6ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாங்கள் பெற்றோராகிவிட்டதை ஆலியா பட் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
அந்த விஷயத்தில் அனுஷ்கா - கோலியை ஃபாலோ செய்யும் ஆலியா - ரன்பீர்?
அந்த விஷயத்தில் அனுஷ்கா - கோலியை ஃபாலோ செய்யும் ஆலியா - ரன்பீர்?


பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட் - ரன்பீர் கபூர் இணையருக்கு நவம்பர் 6ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாங்கள் பெற்றோராகிவிட்டதை ஆலியா பட் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அதுபோலவே, தங்களது பெண் குழந்தைக்கு ராஹா என்று பெயர் சூட்டியிருப்பதையும் இந்த நட்சத்திரத் தம்பதி ஒரு சில நொடிகள் ஓடும் விடியோக்களுடன் அறிவித்திருந்தனர்.

இந்த விடியோவைப் பார்த்த ரசிகர்கள், பிரம்மாஸ்த்திர பட ஜோடிகள் விரைவில் தங்களது வாழ்வின் ராகத்தின் அதாவது மகள் ராஹாவின் புகைப்படத்தை வெளியிடுவார்கள் என்று அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள்.

ஆனால், நவம்பர் மாதமே முடியப் போகிறது. இதுவரை எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. ஆனால், அதற்கு மாறாக ஒரு தகவல்தான் கசிந்துள்ளது. அதாவது ஆலியா - ரன்பீர் இணையர் தங்களது செல்ல மகளின் புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிடப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கலாம் என்பதுவே அது.

ஏற்கனவே, விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா நட்சத்திர ஜோடி, தங்களது குழந்தையின் புகைப்படத்தை இதுவரை வெளியிடவில்லை. மகள் வாமிகாவை, ஊடக கேமராக்களிடமிருந்து தொலைவில் வைத்திருக்கிறார்கள். அவளே வளர்ந்து முடிவெடுத்துக் கொள்ளட்டும், அவர் இந்த காமெரா வெளிச்சத்துக்கு முன் வர விரும்புகிறாரா இல்லையா என்பதை என்று அவர்கள் மகளின் விருப்பத்துக்கு விட்டுவிட்டார்கள். எனவே அலியா - ரன்பீர் இணையர், இதையே பின்பற்ற விரும்பலாம் என்று கூறப்படுகிறது.

இதில்லாமல், முதல் ஆறு மாத காலத்துக்கு தங்களது பெண் குழந்தை மீது காமெரா வெளிச்சம் படுவதை ஆலியா விரும்பவில்லை என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இருவரும் சுற்றுலா செல்லவிருப்பதாகவும், அதுவரையிலாவது அல்லது குழந்தைக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும் வரையிலாவது புகைப்படம் எடுக்காமல் இருக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்களாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com