தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மல்லிகா ஷெராவத் - ஜீவன் கூட்டணியில் ‘பாம்பாட்டம்’ டிரைலர் வெளியானது! 

நான் அவனில்லை படத்தின் மூலம் பிரபலமான ஜீவனின் ‘பாம்பாட்டம்’ டிரைலர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :28 நவம்பர் 2022, 11:37 am

நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மல்லிகா ஷெராவத் நடிக்க உள்ளார். அதேபோல நான் அவன் இல்லை படத்தின் மூலம் பிரபலமான ஜீவனும் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள பாம்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ‘பாம்பாட்டம்’ என பெயரிட்டுள்ளனர். தற்போது இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

வி.பழனிவேல் தயாரித்துள்ள இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியும் உள்ளார் வி.சி. வைத்தியநாதன். இசை - அம்ரீஷ். ஒளிப்பதிவு - இனியன் ஜே ஹாரிஷ். 

இந்தப் படத்தில் ஜீவன், மல்லிகா ஷெராவத்துடன் சுமன், ரித்திகா ஷென், யாஷிகா ஆன்ந்த், சாய் பிரியா, லிவிங்ஸ்டன், கூல் சுரேஷ் என பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.