மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

லவ் டுடே டிரைலரை வெளியிடும் சிம்பு! 

கோமாளி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக தானே ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள படம் லவ் டுடே.

Published On :

கோமாளி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக தானே ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள படம் லவ் டுடே. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கனவே சாச்சிட்டாளே என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது என்னை விட்டு என்ற பாடலின் ப்ரமோ வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப் பாடலை பிரதீப் ரங்கநாதன் எழுதியுள்ளார். 

 லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடிக்க, ராதிகா, யோகி பாபு, ரவீனா, ஃபைனலி பரத், ஆதித்யா கதிர், ஆஜித், விஜய் வரதராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தினேஷ் புருஷோத்தமன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தற்போது இந்தப் படத்தின் டிரைலரை நாளை இரவு 7.02 மணிக்கு நடிகர் சிம்பு வெளியிடப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.