மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'வாரிசு' படத்தில் ஆள் தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ்?

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் ஆள் தோட்ட பூபதி பாடல ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

News image
Updated On :7 அக்டோபர் 2022, 10:56 am

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் ஆள் தோட்ட பூபதி பாடல ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது சென்னையில் நடைபெற்றுவருகிறது. 

அப்போது இயக்குநர் அட்லி மற்றும் நடிகர் ஷாருக்கான் வாரிசு படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் விஜய்யை சந்தித்துள்ளதாக தகவல் வெளியானது. விரைவில் மூவரும் ஒன்றாக இருக்கும் படங்களை எதிர்பார்க்கலாம். 

வாரிசு படத்திலிருந்து தமன் இசையில் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இன்னும் இந்தப் பாடல் குறித்து அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்தப் படத்தில் யூத் பட ஆள் தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக மாஸ்டர் படத்தில் கில்லி பட கபடி பாடலை அனிருத் ரீமிக்ஸ் செய்திருந்தார். 

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், சரத்குமார், சங்கீதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு பொங்கலுக்கு திரைக்குவரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.