வெளியானது ஐஸ்வர்யா லக்ஷ்மியின் ‘அம்மு’ டிரைலர்

நடிகை  ஐஸ்வர்யா லக்ஷ்மியின் புதிய திரைப்படமான ‘அம்மு’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
வெளியானது ஐஸ்வர்யா  லக்ஷ்மியின் ‘அம்மு’ டிரைலர்

நடிகை  ஐஸ்வர்யா லக்ஷ்மியின் புதிய திரைப்படமான ‘அம்மு’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி.  அவர் நடிப்பில் வெளியான ‘மாயநதி’, ‘வரதன்’, ‘காணக்காணே’ உள்ளிட்ட மலையாளப் படங்கள் விமர்சன ரீதியாகவும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தமிழில் 'ஆக்‌ஷன்’ ‘ஜகமே தந்திரம்’ ‘கார்கி’ படங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக, பொன்னியின் செல்வனில் ‘பூங்குழலி’ கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மியின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களைப் பெருமளவு கவர்ந்தது.

இந்நிலையில், தெலுங்கில் அவர் நடித்து முடித்திருந்த ‘அம்மு’ படத்தின் டிரைலரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  

தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்ட இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வருகிற  அக்.19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com