விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

''என் கனவு நிறைவேறியது'' - 'வாரிசு' இசையமைப்பாளர் தமன் பதிவு

என் கனவு நிறைவேறியது என வாரிசு இசையமைப்பாளர் தமன் பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :14 அக்டோபர் 2022, 8:06 am

என் கனவு நிறைவேறியது என வாரிசு இசையமைப்பாளர் தமன் பதிவிட்டுள்ளார். 

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துவருகிறார் இசையமைப்பாளர் தமன். தமிழில் நடிகர் விஜய்யின் வாரிசு, சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட்ஃபாதர் படத்தில் தமனின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்த நிலையில் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், வெகுநாட்களாக காத்திருந்து .. இன்று நான் கண்ட கனவு நிறைவேறியது. என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இறைவனுக்கும் என் அன்னைக்கும் நன்றி. என்று தமிழில் பதிவிட்டுள்ளார். 

வாரிசு படத்துக்காக விஜய் பாடியுள்ளதைத் தான் அவர் அப்படி குறிப்பிடுகிறார் என ரசிகர்கள் தங்களது யூகங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அவர் எதைப் பற்றி அப்படி சொன்னார் என்ற தமனே சொன்னால் தான் தெரியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.