சர்தார் பட நிகழ்வில் நடிகர் கார்த்தியைப் புகழ்ந்து பேசிய நடிகர் நாகார்ஜுனாவின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 21) வெளியாகிறது. இந்தப் படத்தை தெலுங்கில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸ் சார்பாக நடிகர் நாகார்ஜுனா வெளியிடுகிறார்.
நாகார்ஜுனாவும் கார்த்தியும் இணைந்து தோழா படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்தார் விழாவில் நாகார்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது பேசிய நாகார்ஜுனா, ''அண்ணன் சூப்பர் ஸ்டாராக இருக்கும்போது அந்த சூப்பர் ஸ்டார் நிழலில் இருந்து வெளியே வந்து தனித்த அடையாளத்தோடு வெற்றிபெறுவது மிகக் கடினம்.
இதற்கு முன் இரு சகோதரர்களைப் பார்த்துள்ளேன். தெலுங்கில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், கன்னடத்தில் சிவராஜ்குமாரின் தம்பி, புனித் குமார். தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் சூர்யாவின் தம்பி கார்த்தியைப் பார்க்கிறேன். கார்த்தி மிகச்சிறப்பான நடிகராக இருக்கிறார்'' என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


