நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புனித் ராஜ்குமாரின் நினைவு திட்டத்துக்கு சப்தமில்லாமல் உதவிய சிரஞ்சீவி - சூர்யா: பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சி

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்காக கைகோர்த்துள்ள சிரஞ்சீவி மற்றும் நடிகர் சூர்யாவுக்கு பிரகாஷ் ராஜ் நன்றி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :22 அக்டோபர் 2022, 12:52 pm

DIN

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்காக கைகோர்த்துள்ள சிரஞ்சீவி மற்றும் நடிகர் சூர்யாவுக்கு பிரகாஷ் ராஜ் நன்றி தெரிவித்துள்ளார். 

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கிய புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். வெறும் 46 வயதே ஆகும் புனித் ராஜ்குமாரின் மரணம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

புனித் மறைந்து ஓராண்டு நிறைவுபெறவுள்ள நிலையில், அவரது நினைவாக நடிகர் பிரகாஷ் ராஜ்  அப்பு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில்  ஏழைகளுக்கு உதவும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் திட்டம் அறிவித்தார். 

மாவட்டத்துக்கு 1 என்ற எண்ணிக்கையில் கர்நாடகத்தில் உள்ள 31 மாவட்டங்களுக்கும் இலவச ஆம்புலன்ஸ் வழங்க அவர் முடிவு செய்தார். இதனைப் பற்றி கேள்விப்பட்ட நடிகர் சூர்யாவும், சிரஞ்சீவியும் தலா 1 ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார்கள். 

இருவரது உதவி குறித்து பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ''அன்புள்ள சூர்யா மற்றும் சிரஞ்சீவி அண்ணா, அப்பு எக்ஸ்பிரஸ் என்ற திட்டத்துக்காக ஆம்புலன்ஸ் வழங்கி எங்கள் கனவை நினைவாக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.