கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'சரியான தொல்லையப்பா' - யாரை சொல்கிறார் வந்தியத்தேவன் கார்த்தி? - புதிய அறிவிப்பு

பொன்னியின் செல்வன் குறித்து கார்த்தியின் பதிவு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

News image
Updated On :5 செப்டம்பர் 2022, 11:29 am

பொன்னியின் செல்வன் குறித்து கார்த்தியின் பதிவு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

பொன்னியின் செல்வன் பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை (செப்டம்பர் 6) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவிருக்கின்றனர். பொன்னியின் செல்வன் 5 மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் கலந்துகொண்டால் தேசிய அளவில் பேசப்படும் நிகழ்வாக இருக்கும், பொன்னியின் செல்வன் படத்துக்கு நல்ல விளம்பரமாக அமையும். 

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயசித்ரா செம்பியன் மாதேவி வேடத்திலும், ரகுமான் மதுராந்தகன் வேடத்திலும் நடித்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நம்பியாக ஜெயராம் நடித்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

இதனையடுத்து வந்தியத்தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா? உம்மை மட்டும் பிளாக் செய்யவும் முடியவில்லை. ரிப்போர்ட் பண்ணவும் முடியவில்லை. சரியான தொல்லையப்பா என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். 

பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் - நம்பி கதாப்பத்திரத்தின் உரையாடல்கள் சுவாரசியமாக இருக்கும். அது படத்திலும் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பை கார்த்தியின் பதிவு உணர்த்துகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.