சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்திலிருந்து ஜெஸ்ஸிகா லிரிக்கல் விடியோ வெளியாகி யூடியூப்பில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
டாக்டர், டான் என அடுத்து இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதனால் அவர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் பிரின்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
பிரின்ஸ் படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்க, உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமன் பாடியுள்ள இந்தப் பாடலை அறிவு எழுதியுள்ளார்.
யூடியூப்பில் இந்த பாடல் இரவு வெளியான நிலையில் தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படம் திரையரங்குகளில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.