வைவரலாகிக் கொண்டிருக்கிறது குந்தவையுடன் நந்தினி எடுத்த தற்படம்!
திரைப்படமான கல்கியின் பிரமாண்ட நாவலான பொன்னியின் செல்வன் வெளியீட்டையொட்டி சமூக ஊடகங்களில் நிறைய செய்திகள் பரவிவருகின்றன.
பொன்னியின் செல்வன்-1 ப்ரமோஷனுக்காக இந்தப் படத்தில் நடித்த நடிகர்களும் நடிகைகளும் பேட்டியளிப்பதில் தொடங்கி என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள்.
படத்தில் மிக முக்கியமான பாத்திரமான குந்தவையாக நடிக்கும் த்ரிஷாவுக்கு இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் இன்னொரு சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கலாம்.
இதையும் படிக்க: பொன்னியின் செல்வன் - கதையும் பாத்திரங்களும்!
இந்த நிலையில் தன்னுடைய டிவிட்டர் பெயரையே குந்தவை என்று மாற்றினார் த்ரிஷா. இவரைத் தொடர்ந்து, திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்கும் நடிகர் விக்ரம் போன்றவர்களும் தங்கள் ட்விட்டர் பெயர்களை மாற்றிக் கொண்டனர்.
இப்போது வித்தியாசமாக ஒரு தற்படத்தை (செல்பியை) டிவிட்டரில் ஏற்றியிருக்கிறார் நடிகை த்ரிஷா - படத்தில் குந்தவை த்ரிஷாவுடன் இணைந்து நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் படமெடுத்துக் கொண்டிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் - 1 திரைப்படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாகுடி, கட்டுமாவடி, விராலிமலை பகுதிகளில் நாளை மின்தடை

லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகளை விலக்கும் முன்னோட்ட திட்டத்துக்கு உடன்பாடு

தேசியப் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா அறிமுகம்

பைக் மீது பேருந்து மோதல்: நடத்துநா் உயிரிழப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



