தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பிரபல இயக்குநரின் வீட்டிற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரபல இயக்குநரின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார்.

News image
Updated On :28 செப்டம்பர் 2022, 4:09 am

DIN

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரபல இயக்குநரின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார்.

மயக்கம் என்ன படத்துக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தில் இந்துஜா, எல்லி ஏவிஆர்ராம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிப்பில் உருவான இப்படம் நாளை செப்.29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Story image

இந்நிலையில்,  இயக்குநர் செல்வராகவன் மற்றும் அவர் குடும்பத்தினரை அவருடைய வீட்டில் வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் செல்வராகவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.