நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்

இளையராஜா - யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்தார்கள்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 7:39 am

DIN


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 4 அன்று மாமனிதன் படம் ஒளிபரப்பாகவுள்ளது. 

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்தை இயக்கினார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்த நான்காவது படமிது.

இளையராஜா - யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்தார்கள். கடந்த ஜூன் 23 அன்று திரையரங்குகளிலும் அதன்பிறகு ஆஹா தமிழ் ஓடிடியிலும் படம் வெளியானது.

இந்நிலையில் அக்டோபர் 4 அன்று மதியம் 2 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாமனிதன் படம் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.