
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தரராஜன். இவர் அடுத்ததாக கேப்டன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
டெடி படத்தைத் தொடர்ந்து ஆர்யாவும், இயக்குநர் சக்தி சௌந்தரராஜனும் இந்தப் படம் மூலம் இணைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனமும், திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
இதையும் படிக்க | 'இதனால்தான் நாங்க பிரிஞ்சுட்டோம்': கவின் குறித்து மனம் திறந்த லாஸ்லியா
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரில் டிராகன் ஒன்று பின்னணியில் இருக்க, ஆர்யா ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் நிற்கிறார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
Here’s the first look of #Captain