பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பிரபல தமிழ் நடிகையை காதல் திருமணம் செய்யவிருக்கும் வினய்: சுவாரசியத் தகவல்

நடிகர் வினய் விரைவில் காதல் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

News image
Updated On :5 ஏப்ரல் 2022, 1:12 pm IST

மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவின் 'உன்னாலே உன்னாலே' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் வினய். தொடர்ந்து 'ஜெயம் கொண்டான்', 'என்றென்றும் புன்னகை' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடிகர் வினய் வில்லனாக மிரட்டினார். இந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பினால் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். 

தற்போது சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் மற்றும் அவரது மகன் இணைந்து நடித்துள்ள 'ஓ மை டாக்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Story image

நடிகர் வினய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை விமலா ராமனுடன் இருக்கும் படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். தற்போது இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வினய் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

Story image

இதனையடுத்து இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தத் தகவலை இருவரும் உறுதிபடுத்தவில்லை. 'டேம் 999' படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பாலசந்தரின் 'பொய்' படத்தின் மூலம் விமலா ராமன் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 'ராமன் தேடிய சீதை', 'இருட்டு' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.