தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

''மீண்டும் மாமாவாகிட்டேன்'': மகிழ்ச்சிகரமான செய்தியைப் பகிர்ந்த விஷால்: குவியும் வாழ்த்துகள்

ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் மகிழ்ச்சிகரமான செய்தியைப் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:42 am

DIN

நடிகர் விஷால் நடிப்பில் வீரமே வாகை சூடும் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துவருகிறார். 

லத்தி படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தங்களது ராணா புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

இந்த நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தங்கைக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டதாக அறிவித்துள்ளார். அவரது பதிவில், ''இதை விட என்ன கேட்டுவிட முடியும். மீண்டும் மாமாவாகியிருக்கிறேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி.

என்னுடைய தங்கை ஐசுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. புதிய இளவரசியை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக நடிகர் விஷால் இன்ஷா அல்லாஹ் என்று பதிவிட்டிருப்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.