ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

‘தலைவர் 169’: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நெல்சன்

நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க மாட்டார் என பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2022, 2:40 pm IST

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தனது 169வது படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க மாட்டார் என பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகை நயந்தரா நடிப்பில் கோலமாவு கோகிலா, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்ற நிலையில் நடிகர் விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது.

இதற்கிடையே நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்னதாகவே நடிகர் ரஜினியின் 169வது படத்தை இயக்க நெல்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸும் உறுதி செய்தது.

இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால், நெல்சன் தயாரிப்பில் 169வது படத்தில் நடிகர் ரஜினி நடிக்க மறுத்துவிட்டார் என்று சமூக ஊடகங்களில் வேகமாக செய்திகள் பரவின.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இயக்குநர் நெல்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் உள்ள பயோவில், தான் எடுத்து வெளியான மூன்று திரைப்படங்கள் பெயருடன், தலைவர்169 என்ற பெயரையும் சேர்த்துள்ளார்.

Story image

இதன்மூலம், விரைவில் ரஜினியின் 169வது படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.