உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட ஷிவ ராஜ்குமார் பிறந்த நாள் விடியோ!

பிரபல கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் பிறந்த நாள் விடியோ குறித்து...

Shiva Rajkumar poster.

ஷிவ ராஜ்குமார் போஸ்டர். - படம்: எக்ஸ் / சன் பிக்சர்ஸ்.

Published On :12 ஜூலை 2026, 3:38 pm IST

பிரபல கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் பிறந்த நாளுக்காக ஜெயிலர் 2 படக்குழுவினர் விடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் ஷிவ ராஜ்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார்.

ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் ஷிவ ராஜ்குமார் நடித்த காட்சிகள் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றியினால் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஜெயிலர் - 2 திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நெல்சன் பாராட்டும் விடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.