ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கப்பட்டது.

News image
இயக்குநர் எம்.ராஜேஷ், ஜெயம் ரவி, பிரியங்கா அருள்மோகன்
Updated On :5 ஆகஸ்ட் 2022, 8:22 am

DIN

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கப்பட்டது.

’சிவா மனசுல சக்தி’ ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற  வெற்றிபெற்ற முழுநீள நகைச்சுவை படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் சமீப காலமாக சுமாரான படங்களையே இயக்கி வருகிறார்.

குறிப்பாக, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், எம்.ராஜேஷ் நடிகர் ஜெயம் ரவியின் 30-வது திரைப்படத்தை இயக்குகிறார் எனத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று அப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

Story image

ஸ்கிரீன் கிரீன் மீடியா தயாரிக்கு இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசைமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.