மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

’பொன்னியின் செல்வன்’ டிரைலரை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் மற்ற பாடல்கள் மட்டும் டிரைலர் வெளியீட்டை மிகப்பெரிய அளவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அப்படத்தின் டிரைலரை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.