சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

’ஷியாம் சிங்கா ராய்’ ஆஸ்கருக்கு பரிந்துரை!

நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த ‘ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் இந்தியா சார்பில் 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2022, 2:33 pm

DIN

நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த ‘ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் இந்தியா சார்பில் 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் நானி நடிப்பில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ’ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மறுபிறவி எடுக்கும் ஒரு எழுத்தாளனின் கதையாக உருவான இப்படத்தில் நடிகை சாய் பல்லவி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதுடன் நடனத்திலும் தனி முத்திரை பதித்திருந்தார்.

பெரிதும் கவனிக்கப்பட்ட இப்படம் தற்போது, சிறந்த காலகட்டத் திரைப்படம்(period film), சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்திற்கு மைக்கே ஜே.மேயர் இசையமைத்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.