வெளியானது விக்ரமின் 'கோப்ரா' பட கால அளவு, சென்சார் விவரம்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் கால அளவு மற்றும் சென்சார் விவரங்கள் வெளியாகியுள்ளது.
டிமாண்டிக் காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கயிருக்கும் படம் கோப்ரா. விக்ரம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், கனிகா, மிருணாளினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் 7 வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க | தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' - இரண்டு நாட்களில் இவ்வளவு வசூலா?
கோப்ரா திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக வெளியிடுகிறார்.
கோப்ராவுக்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாம். அதன் படி இந்தப் படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் கோப்ரா படம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடக் கூடியது. கிட்டத்தட்ட 3 மணி நேர படமாக கோப்ரா உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.