நடிகை காஜல் அகர்வால் 'இந்தியன் -2' திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதனிடையே அவர் நடிப்பில் உருவாகியுள்ள கோஸ்டி திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்து விரைவில் வெளியாகவுள்ளது.
'குலேபகாவலி', 'ஜாக்பாட்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கல்யாண் 'கோஸ்டி' படத்தையும் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அவர்களைத் தொடர்ந்து தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, ஆடுகளம் நரேன், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு ஏழு இசையமைப்பாளரள் கூட்டணி சேர்ந்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைக்க 7 இசையமைப்பாளர்கள் சேர்ந்து பாடியுள்ளனர்.
பாடலாசிரியர் விவேக் எழுதிய பாடலை, இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன், லியோன் ஜேம்ஸ், விவேக்-மெர்வின், ஹரிசரண், சத்ய பிரகாஷ், குணா, பிரேம்ஜி மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பாடியுள்ளனர்.
விடுங்கடா விடுங்கடா எனத் தொடங்கும் பாடல், தற்போது பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.