என்னய்யா கிசுகிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க! 

என்னய்யா கிசுகிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க! 

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் கவிஞர், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன். 
Published on

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் கவிஞர், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன். 

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

பொன்னியின் செல்வன் படம் உலகளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்தப் படத்தில் பொன்னி நதி பாடலும், தேவராளன் ஆட்டம் பாடலும் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. இந்த பாடலை எழுதியவர் கவிஞர், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரி படத்திற்கு இளங்கோ பாடல் எழுதுவதாக செய்திதாள்களில் வரவே அவர் அதை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, “என்னய்யா கிசுகிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க” என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது நண்பர்கள், “ரசிக்கற மாதிரி கிசு கிசு வர்றது அதிசயம். நிறைவேறட்டும்” என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

தூய தமிழில் தமிழ் சினிமாவில் பாடல்கள் வர இப்படியான கவிஞர்கள் அதிகமாக பாடல் எழுத வேண்டுமென்பதே தமிழ் ரசிகர்களின் ஆசை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com