
ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோஹிணி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விட்னஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
புகைப்பட கலைஞர் தீபக் அவர்களின் முதல் படம் விட்னஸ். அவரே ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். முத்துவேல், ஜே.பி.சாணக்யா திரைக்கதை எழுதி உள்ளனர். ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோஹிணி, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தினை விஷ்வா பிரசாத் தயாரித்துள்ளார்.
ரமேஷ் தமிழ்மணி இசையில் கபிலன் பாடல் எழுத பிலோமின் ராஜ் எடிட் செய்துள்ள இப்படம் மலக்குழி மரணங்கள் பற்றி பேசுகிறது. முக்கியமான உரையாடல்களை இந்த படம் சமூகத்தில் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீபுள் மீடியா பேக்டரி வழங்கும் இந்தப் படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் டிச.9ஆம் நாள் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது குறிப்பிட்டத்தக்கது.