பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

‘தில் ராஜூக்கு தில்லு அதிகம்தான்’- ரசிகர்கள் கிண்டல் 

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியதற்கு ரசிகர்கள் ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர். 

News image
Updated On :25 டிசம்பர் 2022, 2:37 pm IST

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியதற்கு ரசிகர்கள் ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர். 

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் ரஞ்சிதமே 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களையும், இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ 26 மில்லியன் (2.6 கோடி) பார்வையாளர்களையும் யூடியூபில் சமீபத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 24) மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தில் ராஜூ மேடைக்கு வந்ததும் ரசிகர்கள் நம்பர் 1 நம்பர் 1 என கூச்சலிட்டனர். எனவே தயாரிப்பாளர் தில் ராஜூ, “ஆமாம், விஜய்தான் நம்பர்.1” என கூறினார். ஏற்கனவே தமிழில் நடிகர் விஜய்தான் நம்பர்1 என அவர் கூறியது சர்ச்சையானது. இந்நிலையில் மீண்டும் அவர் இவ்வாறு கூறியுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நிஜமாகவே தில்ராஜூக்கு தில்லு அதிகம்தான் என ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர். 

மேலும் தில் ராஜூ வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கூறியதாவது:

விஜய் சூப்பர் ஸ்டார். படத்திலும் மட்டுமல்ல நிஜத்திலும். வாரிசு திரைப்படம் பொங்களுக்கு மிகப்பெரிய வெற்றி அடையும். தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் வெற்றியடையும். இது எந்த படத்தின் ரீமேக்கும் கிடையாது. நேரடியான தமிழ்ப் படம். சண்டை, பாடல்கள், எமோஷன் என எல்லாம் இருக்கும். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். இந்த பொங்கள் நமக்குதான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.