
மாறி வரும் இந்திய சினிமாவில் நடிகர்-நடிகைகள் துணிச்சலான முடிவினை எடுத்து தங்களது படங்களை பெரிய அளவிலான ரசிகர்களுக்கு எடுத்துச் செல்ல இதுவே சரியான நேரம் என நம்புவதாக நயன்தாரா தெரிவித்துள்ளார்.
38 வயதாகும் நயன்தாரா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் மிகப் பெரிய நடிகையாக வலம் வருகிறார். அவர் தற்போது தனது ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘கனெக்ட்’ படத்தினை ஹிந்தியில் ரிலீஸ் செய்ததன் மூலம் ஹிந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் முதல் முறையாக முழுவதுமாக நடிக்க உள்ளார்.
இதையும் படிக்க: 2022-ல் மோடி அளித்த வாக்குறுதிகள்! கேலி செய்த பிரஷாந்த் பூஷண்
இந்த நிலையில், காணொலி வாயிலாக நேர்காணல் ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.
அந்த நேர்காணலில் நயன்தாரா பேசியதாவது: இந்த மாறி வரும் திரையுலகம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. அது எங்களை தைரியமாக துணிச்சலான முடிவுகளை எடுக்க ஊக்கமளிக்கிறது. இது போன்ற ஊக்கத்தினால் நாங்கள் தமிழ் திரைப்படங்களை மற்ற மொழிகளில் வெளியிடுகிறோம். மற்ற மொழியில் உள்ள மக்களுக்கு இயக்குநர் மற்றும் நடிகர்-நடிகைகள் யார் என்று பெரிதாக தெரியாவிட்டாலும் வளர்ந்து வரும் சினிமாத் துறை இது போன்ற துணிச்சலான முடிவுகளை எடுக்க உந்துசக்தியாக இருக்கிறது.
இதையும் படிக்க: 2022 அரசியலில் ஜொலித்த பிரபலங்கள்!
எந்த ஒரு விஷயத்தை செய்வதற்கும் சரியான நேரம் என்பது முக்கியம். முன்னதாக எனக்கு ஹிந்தியில் நடிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை. அதேபோல் முன்பு இருந்த சூழ்நிலைகளும் அதற்கு ஏற்றதாக இல்லை. ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. நாங்கள் அதற்கு ஏற்றவாறு நகர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...