விஜயகாந்த்தா இவர்? வெளியான சமீபத்திய புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் விஜயகாந்த்தின் சமீபத்திய புகைப்படம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
விஜயகாந்த்தா இவர்? வெளியான சமீபத்திய புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கோலோச்சியவர் விஜயகாந்த். குறிப்பாக இவரது ஆக்சன் படங்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தனக்கென வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டவர் விஜயகாந்த்.

நடிகர் சங்கத் தலைவராக இருந்து பல்வேறு சாதனைகளை செய்தார். தனது உதவும் குணத்தால் மக்கள் மனதில் இடம்பிடித்தார். மற்ற நடிகர்கள் தயங்கிக்கொண்டிருந்தபோது தைரியமாக களத்தில் குதித்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார்.

கட்சி துவங்கிய சில ஆண்டுகளுக்குள்ளாகவே தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலைக்கு தனது கட்சியை உயர்த்திக்காட்டினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

இருப்பினும் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் அவர் மிகவும் மெலிந்தநிலையில் இருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com