
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் வருவாய் ரீதியாக இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்தது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரும் பக்க பலமாக அமைந்திருந்தது. இந்தப் படத்தின் விடியோ பாடல்களுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்த்திருந்தனர். ஏற்கனவே ஸ்ரீ வள்ளி பாடல் இணையதளங்களில் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க | தனுஷின் 'வாத்தி' படப்பிடிப்பு துவங்கியது: வெளியான புதிய போஸ்டர்
புஷ்பா திரைப்படம் இன்று(வெள்ளிக்கிழமை) அமேசான் பிரைம் ஓடிடித் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது சாமி சாமி பாடல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.