
கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. பாதிப்பை குறைக்கும் பொறுட்டு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலரும் கரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகர்கள் அருண் விஜய், மகேஷ் பாபு, நடிகை த்ரிஷா, இசையமைப்பாளர் தமன், நடிகை ஷெரீன் உள்ளிட்டோர் கரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.
இதையும் படிக்க | அதிசயங்களை நிகழ்த்திய ஹாரிஸுக்குப் பிறந்த நாள்
அந்த வகையில் நடிகர் சத்யராஜுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் பிரியதர்ஷனும் கரோனா பாதிப்பினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.