நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் - ''எனக்கு இருந்த அறிகுறிகள் இதுதான்'' - ரசிகர்களுக்கு அறிவுறுத்தல்

நடிகை ஷோபனா தனக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.
நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் - ''எனக்கு இருந்த அறிகுறிகள் இதுதான்'' - ரசிகர்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பலரும் கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகை ஷோபனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''எல்லா பாதுகாப்பு நடைமுறைகளையும் மேற்கொண்டும் எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. எனக்கு மூட்டுகளில் வலி ஏற்பட்டது. தொண்டையில் கரகரப்பு இருந்தது. பின்னர் தொண்டை புண்ணாக மாறியது. 

ஆனால் அது முதல் நாள் மட்டும் தான். பின்னர் எனது அறிகுறிகள் மெல்ல குறையத் துவங்கின. நான் இரண்டு தவனை தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் அது என்னை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துள்ளது. ஆகையால் எல்லாோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com