விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கரோனா

நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  

News image
Updated On :11 ஜனவரி 2022, 12:19 pm

DIN

நாடு முழுவதும் கரோனாவினால் திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.  

அவரது பதிவில், ''எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் மேற்கொண்டிருந்தேன். ஆனால் அந்த அளவுக்கு கரோனா தீவிரமாக பரவி வருகிறது. 

 நான் தற்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இன்னும் நீங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். விரைவில் நலம் பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.