காதலருடன் திருமணம் : புகைப்படங்களைப் பகிர்ந்த நடிகை ரெபா

திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரெபா மோனிகா ஜான் பகிர்ந்துள்ளார். 
காதலருடன் திருமணம் : புகைப்படங்களைப் பகிர்ந்த நடிகை ரெபா

பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். தற்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக எஃப்ஐஆர் படத்தில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் அவர் ஜோமன் ஜோசஃப் என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. ரெபா திருமணம் குறித்து அறிவிக்காததால் பலருக்கும் இந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில் நடிகை ரெபா மோனிகா ஜான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை ரெபா பகிர்ந்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com