
2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். முத்தையா இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பருத்தி வீரன் படத்துக்கு பிறகு மதுரை மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என கார்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்திருந்தார்.
இந்தப் படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
Here it is!
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) January 14, 2022
Dropping the super intense first look poster of #Viruman #VirumanFirstLook@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial pic.twitter.com/aZsXcSSyXG