நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'அருந்ததி' குறித்து அனுஷ்கா நெகிழ்ச்சி - ''வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக் கூடிய வேடம்''

அருந்ததி திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆனதையொட்டி அனுஷ்கா தனது ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :17 ஜனவரி 2022, 7:18 am

DIN

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. தமிழில் ரஜனிகாந்த், அஜித், விஜய், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். குறிப்பாக பாகுபலி திரைப்படத்தின் வெற்றி அவரை இந்திய அளவில் பிரபலமான நடிகையாக்கியது. 

இந்த நிலையில் அவரது நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான அருந்ததி திரைப்படம் மாபரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தமிழில் அருந்ததி என்ற பெயரிலேயே வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. 

இந்தப் படம் வெளியாகி 13 வருடங்கள் ஆனதையொட்டி நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''அருந்ததி திரைப்படம் வெளியாகி 13 வருடங்களாகிறது. எல்லா நடிகைகளுக்கும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்க கூடிய கதாப்பாத்திரம்.

நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். கோடி ராம கிருஷ்ணா மற்றும் ஷியாம் பிரசாத் ரெட்டி உட்பட படக்குழுவினருக்கு நன்றி. இந்தப் படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி. அருந்ததி என் மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.