தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

கரோனாவுக்கு பிறகு நடிகர் வடிவேலு எப்படி இருக்கிறார்?: வெளியான புகைப்படம்

நடிகர் வடிவேலு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. 

Published On :

நடிகர் வடிவேலு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. 

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் லண்டன் சென்றிருந்தனர்.

Story image

ஒமைக்ரான் அதிகம் பரவி வரும் லண்டனிலிருந்து திரும்பியதால் வடிவேலுவிற்கு விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கடந்த மாதம் 24ஆம் தேதி அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்ட அவர், கடந்த 2ஆம் தேதி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு செல்லத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், அவருடன் சின்னத்திரை நடிகர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கரோனாவிலிருந்து குணமடைந்த பிறகு அவர் எடுத்துக்கொண்டதாக வெளியான முதல் புகைப்படம் இது என்பதால், இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.    

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.