
இயக்குநர் பாரதிராஜாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதிராஜா முற்றிலும் குணமாகிவிட்டதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா பூரண நலத்துடன் இன்று காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்ற செய்தியை அவரது உதவியாளர் மூலம் அறிந்தேன் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே மிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | ஸ்ரீதேவியுடன் இருக்கும் பழைய படத்தை பகிர்ந்த அமிதாப்: சரியாக கண்டுபிடித்த ரசிகர்கள்
பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருந்த ராக்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார்.
கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து இயக்குநர் இமயம் @offBharathiraja அவர்கள்
— R.Seenu Ramasamy (@seenuramasamy) January 31, 2022
பரிபூரண நலத்துடன் இன்று காலை மருத்துவமனையிலிருந்து
இல்லம் திரும்பினார் என்ற செய்தியை அவரது உதவியாளர் சுரேஷ் மூலம் அறிந்தேன்.மகிழ்ச்சி.