தொடர் விடுமுறை: சென்னை மாநகர் பேருந்துகளில் 3 நாள்களில் 4.15 லட்சம் பேர் பயணம்!சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்! 137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

கத்ரீனா கைஃப், ஷாருக் கானுக்கு கரோனா பாதிப்பு

பாலிவுட் திரையுலகைச் சோ்ந்த பிரபல நடிகா் ஷாருக் கான், நடிகை கத்ரீனா கைஃப் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Updated On :

பாலிவுட் திரையுலகைச் சோ்ந்த பிரபல நடிகா் ஷாருக் கான், நடிகை கத்ரீனா கைஃப் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கடந்த சில நாள்களாக நாட்டில் கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. முக்கியமாக மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் வேகம் சற்று அதிகமாகவே உள்ளது. இது அங்குள்ள திரை பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கெனவே நடிகா்கள் காா்த்திக் ஆா்யன், ஆத்யா ராய் கபூா் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில் இப்போது ஷாருக் கான், கத்ரீனா கைஃப் ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு பாதிப்பு மிதமான அளவில் உள்ளதால், மருத்துவா்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வருக்கு கரோனா:

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸுக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரும் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

மகாராஷ்டிர சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரான ஃபட்னவீஸுக்குக் கடந்த 2020 அக்டோபரிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.