
பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு நகர எம்ஜி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்றிரவு (ஜூன் 12) நடைபெற்ற மது விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு காவல்துறையினர் அங்கு சென்று 35 பேரிடம் சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்தனர். அதில் சக்தி கபூரின் மகனும், நடிகை ஸ்ரத்தா கபூரின் சகோதரனுமான சித்தாந்த் கபூர் உட்பட 6 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
சித்தாந்த் கபூர் பௌகால் என்ற இணையத் தொடரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். முன்னதாக சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தில் சக்தி கபூரின் மகள் ஸ்ரத்தா கபூரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
பெங்களூரில் திரையுலக நட்சத்திரங்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக கைது செய்யப்படுவது தொடர்கதையாகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரை கைது செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.