
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்திய அளவில் அதிக முறை பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் டான் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே 13 ஆம் தேதி வெளியான படம் டான். கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றாலும், ரசிகர்களை இந்தப் படம் பெரிதும் கவர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | 'டான்' படத்துக்கு ராமதாஸ் விமர்சனம் - சிவகார்த்திகேயன் பதில்
தந்தை - மகனுக்கிடையேயான உறவு சிக்கல்களை பேசும் இந்தப் படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இந்தப் படத்தை தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பாராட்டினார்.
இந்தப் படத்தின் வெற்றிவிழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலில் டான் படத்தின் கதை தனக்கு சொல்லப்பட்டதாகவும், பள்ளி மாணவனாக நடிக்க இயலாது என்பதால் இந்தப் படத்தில் நடிக்க மறுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான இந்தப் படம் குறித்த கருத்துக்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நெடஃபிளிக்ஸ் நிறுவனம் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது.
இதையும் படிக்க | வெளியானது சிவகார்த்திகேயனின் டான் பட விடியோ பாடல்
அதில் இந்த வாரம் அதிக முறை பார்க்கப்பட்ட படங்களில் பட்டியலில் டான் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் ஆர்ஆர்ஆர் பட ஹிந்தி பதிப்பும், 3வது இடத்தில் இண்டர்செப்டர் படமும், 4வது இடத்தில் சிபிஐ 5 தி பிரெய்ன் படமும் 5வது இடத்தில் ஜன கன மன படமும் உள்ளது.
மேலும் 6வது இடத்தில் ஜெர்ஸி, 7வது இடத்தில் கங்குபாய், 8வது இடத்தில் ஜன கன மன தெலுங்கு பதிப்பு, 9 வது இடத்தில் ரா (பீஸ்ட்) 10 இடத்தில் ஹஸ்டில் என்ற படமும் உள்ளது. இதனயைடுத்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் நெட்ஃபிளிக்ஸின் பதிவை அதிகம் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
The top 10 titles this week look fly and no, it's not because Vecna has them under his spell. pic.twitter.com/hBwZc3Jcdz
— Netflix India (@NetflixIndia) June 15, 2022
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...